ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்துகாங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்துகாங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்

சிவகங்கை

காரைக்குடி,

ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த பாரதீய ஜனதா அரசை கண்டித்து கல்லலில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார தலைவர் இருதயராஜ் முன்னிலை வகித்தார்

.காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி கண்டண உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சாத்தையா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமொழி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பஞ்சாயத்ராஜ் கமிட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், கல்லல் ஒன்றிய துணை தலைவர் நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன், காரைக்குடி நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிவானந்தம், தேவகோட்டை நகர தலைவர் லோகநாதன் கண்ணங்குடி வட்டாரத் தலைவர் ராஜ்மோகன். மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

1 More update

Next Story