தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராடி பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி தொழிலாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். உள்ளாட்சி பணியாளர் சமேளன மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மணவழகன், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன், கட்டிட தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர் மஞ்சுளா, மின்சாரத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரகுநாதன், ஆட்டோ சங்க நகர தலைவர் முத்தையா ராமு மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story