கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அகவிலைப்படி உயர்வு, ஒப்புவிப்பு விடுப்பு, பழைய ஓய்வு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். கண்ணதாசன் தலைமையிலும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர். கோடைமலைக் குமரன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன், மாநில செயற்குழு உறுப்பினர். முத்தையா, தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆட்சிப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story