கிராம நிர்வாக அலுவலர் படுகொலை: சிங்கம்புணரி, இளையான்குடியில் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து சிங்கம்புணரி, இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிங்கம்புணரி
கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து சிங்கம்புணரி, இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிங்கம்புணரி வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பாண்டி செல்வம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டியும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி
கிராம நிர்வாக அலுவலர் கொலையை கண்டித்து இளையான்குடி தாலுகா அலுவலகத்தில், இளையான்குடி கிராம நிர்வாக அலுவலர் வட்டார தலைவர் மணிகண்டன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட இளையான்குடி வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்தவர்களை கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தேவகோட்டை வட்டார கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர்.