அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

சிவகங்கை

சிவகங்கை

தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், அங்கீகாரத்தை திரும்ப வழங்கக் கோரியும் சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன்பாக அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் குரூப்-டி சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் நான்கின் தலைவர் மகாலிங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினா்.

இதில் அஞ்சல் மூன்று சங்க செயலாளர் மதிவாணன், அஞ்சல் 4 சங்க செயலாளர் நடராஜன், புறநிலை ஊழியர் சங்க செயலாளர் செல்வன், நாகலிங்கம், கரிகாலச்சோழன், திருக்குமார், முருகானந்தம், கண்ணாத்தாள், மாலதி, அருள் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story