நாகர்கோவிலில்10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில்10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில்10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாயர், வெள்ளாளர், பிராமணர், சைவ வெள்ளாளர், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட சமுதாய குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக கூறியும், எனவே அதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் 70 ஆண்டுகள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு உரிமையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். பிரேமசந்திரன், குமாரசாமி பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட வெள்ளாளர் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் தாணப்பன், அகில பாரத பிராமணர் சங்க தலைவர் குளத்துமணி அய்யர், தமிழக அரசின் முன்னாள் உள்துறை துணை செயலாளர் சாஸ்தாங்குட்டி பிள்ளை, குமரி மாவட்ட சைவ வேளாளர் சங்க தலைவர் முருகன், அய்யப்ப சமாஜ் சேவா சங்க மாநில அமைப்பாளர் நாஞ்சில் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதாவினர் ஆதரவு தெரிவித்து மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story