சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் செய்தனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும். டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடைபிடிக்கிற முறையைப் போன்று தமிழகத்தில் அனுமதி பெறாமல் இயங்குகிற இருசக்கர பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும். அரசின் ஆட்டோசெயலியை தொடங்கிட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வாகன சட்டதிருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலக புரோக்கர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்ைககளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கருப்பு தலைமை தாங்கினார். பொருளாளர் குமாரவேல் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் விஜயகுமார், அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், நிர்வாகிகள் சசிவர்ணம், கணேசன், வெங்கடேஷ்வரன், நாகராஜ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.