தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், பழனி, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story