விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பஸ் நிறுத்த பகுதி அருகே, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவீதம் கூலி உயர்வு மற்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசைத்தறி சங்க ஒன்றிய தலைவர் அசன் தலைமை தாங்கினார். மேலும் 26 மாதங்கள் ஆகியும் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு காணாத விசைத்தறி நிர்வாகங்களை கண்டித்தும், 75 சதவீதம் கூலி உயர்வு மற்றும் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story