வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சிவகங்கை

சிவகங்கை

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் தமிழரசன், மாவட்ட தலைவர் சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


Next Story