பாப்பிரெட்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு நிர்வாகி தேவராஜன், மாவட்ட செயலாளர் கலைசெல்வம், மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் கமல் மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி கோம்பூர்-அரசு புளியந்தோப்பு முதல் பார்வதி அம்மன் கோவில் வரை உள்ள குண்டும், குழியுமான மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ் மற்றம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி சங்கர் நன்றி கூறினார்.
Next Story