கிருஷ்ணகிரியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 8:14 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ், பழங்குடியின குறவன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்களை சித்தூர் போலீசார் தாக்கியதை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மலைவாழ் மக்கள் சங்க மாநில குழுத்தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சண்முகம், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், பழங்குடி குறவன் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநிலத்தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பிரகாஷ், மகாலிங்கம், சாமு, வேலு, ராதா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோஷம்

இதில் புளியாண்டப்பட்டியை சேர்ந்த குறவர் இன மக்கள், சித்தூர் போலீசாரால் அழைத்து சென்று தாக்கியதை கண்டித்தும், பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், சித்தூர் மாவட்ட போலீசார் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் எனக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினா். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story