பா ஜ க வினா் கண்டன ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து பா ஜ க வினா் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ரவி, முருகன், அறிவழகன், மேற்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வசந்தன், செயலாளர் மலையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாசம் வரவேற்றார். பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, மாநில சிந்தனையாளர் பிரிவு ஜோதிநாதன், ஊடக பிரிவு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வக்கீல்கள் செல்வநாயகம், ஜெயதுரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, துணைத் தலைவர்கள் ராஜேஷ், காந்திமதி, மாநில நிர்வாகி துரைவேல், ஜெயவர்மா, நிர்வாகிகள் ராமச்சந்திரன், அருள், ரமேஷ், பாலாஜி, முத்து, நவநீதம், விநாயகம், முருகன், பாஸ்கர், கோவிந்தன், தேவரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.