தி.மு.க. அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்துகள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது தர மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், விளைநிலங்களை அழிக்க துடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கோவி.முருகன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், விஜயகுமார், குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் இளையராஜா வரவேற்றார்.
கண்டன கோஷம்
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தவமணி, மாவட்ட பொருளாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, அருணாசலம், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், மஞ்சுநாதன், சின்னசேலம் நகர செயலாளர் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பச்சமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம், கர்நாடக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.