சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து லெம்பலக்குடி சுங்கச்சாவடி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பொது சொத்துக்களை சூறையாடாதே. ஆன்லைன் என்ற பெயரில் டிரைவர்களிடம் அபராதம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story