கிராம நிர்வாக அலுவலர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலரை வெட்டி கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

மவுன அஞ்சலி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சூரியமூர்த்தி, வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜகுரு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் நினைவாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story