மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில், அச்சங்கத்தினர் மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அகில இந்திய கிசான் சபாவினர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story