என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்


என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரத்தில் என்.எல்.சி.யை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

கடலூர்

கம்மாபுரம்,

நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பாகுபாடு இன்றி சம அளவில் இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. கூறுகையில்,

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, விருத்தாசலம் வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பெட்டியில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வழங்கக்கோரி மனு அளித்தனர்.

தொந்தரவு இல்லை

அப்போது இந்த பிரச்சினைக்கு ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தீர்வு காணப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வரை விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காமல் காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாண்டு வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.ஆட்சியின் போது நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் விவசாயிகளுக்கு எவ்வித தொந்தரவு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போதைய அரசு என்.எல்.சி.க்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு துடியாய் துடிக்கிறது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி, கம்மாபுரம், கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story