துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்


துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

அரியலூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட 93 சதவீத அமைப்பு சாராத்தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர் நலன் புறக்கணிப்பு, விவசாயிகள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்படாததை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story