நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பெரம்பலூர் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல துணை தலைவர் சாந்தமூர்த்தி, இணை செயலாளர் சுதாகர் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். பொருளாளர் தேவகுமார், சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊழியர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமாக கூட்டுறவு அலுவலர்களை மண்டல மேலாளராக நியமிப்பதை கண்டித்தும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் இயக்க இழப்பு தொகையினை கொள்முதல் தொழிலாளர் மீது திணிக்க கூடாது. சுமை தூக்கும் பணியில் அவுட்சோர்ஸ் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.