ரெயில்வேயில் தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ரெயில்வேயில் தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

ரெயில்வேயில் தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவில் ரெயில்வே உற்பத்தியில் ரெயில் லோகோ தயாரிக்க தனியாரை பயன்படுத்துவதை கண்டித்தும், மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகத்தை கண்டித்தும், ரெயில்வே உற்பத்தி பணிமனையை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது ரெயில்வேயில் தனியாரை அனுமதிக்கக்கூடாது. லோகோ உற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. வந்தே பாரத் டி-18 தயாரிக்கும் ஐ.சி.எப்., எம்.சி.எப். லத்தூரில் தனியாரை அனுமதிக்கும் முடிவை உடனடியாக ெரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ பொன்மலை உள்ளிட்ட பணிமனைகளில் தனியாருக்கு பணிகளை வழங்கினால் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் தனியார் மயத்தை கண்டித்து விரைவில் இந்தியா முழுவதும் ரெயில் நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story