மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி நேற்று மாவட்ட சாமனியமக்கள் நலக்கட்சி சார்பில் வாங்கல் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேவேந்திரன் தலைமை தாங்கினார். வாங்கல், நன்னியூர், நெரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் புதிதாக மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில பொதுச்செயலாளர் குணசேகரன், செயலாளர் தென்னரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story