மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா கண்டனம் தெரிவித்து பேசினர். மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கி வந்த உர மானியம், உணவு மானியத்தை நிறுத்தியதை கண்டித்தும், கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்களை பாதுகாத்து வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியதை கண்டித்தும், போதுமான நிதி ஒதுக்கிட வலியுறுத்தியும், எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்ததாக அதானியை கைது செய்து, அவரது சொத்துக்களை முடக்க கோரியும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி பாதுகாத்திட பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story