மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், அரிசி, பருப்பு, மாவு, வெல்லம், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கி, உழைப்பாளி மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றியதற்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story