நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சலோமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story