சுடுகாடு கேட்டு ஆர்ப்பாட்டம்


சுடுகாடு கேட்டு ஆர்ப்பாட்டம்
x

சுடுகாடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பை ஊராட்சி பச்சைமலை அடிவாரத்தில் உள்ள மூலக்காடு கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள், இறந்தவர்கள் உடலை புதைப்பதற்கு சுடுகாடு இன்றி சிரமப்படுவதாகவும், அதற்கான ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடிப்படை வசதியான சுடுகாடு வசதி கேட்டும், குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாக்கடை, சாலை வசதி வேண்டியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் கணபதி தலைமையில் துறையூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு சுப்பிரமணியன், துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், ஒன்றிய தலைவர் முத்துசாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சங்கிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story