கிணத்துக்கடவில் கண்டன ஆர்ப்பாட்டம்


கிணத்துக்கடவில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2023 1:30 AM IST (Updated: 22 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி கிணத்துக்கடவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். இதை கண்டித்தும், பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.




Next Story