மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டணத்தை உயர்த்திய    தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

மின்கட்டணம், சொத்துவரி, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து சங்கராபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் (வடக்கு) அரசு, (தெற்கு) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத் தலைவர்கள் அண்ணாமலை, சக்கரவர்த்தி, நகர செயலாளர் நாராயணன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான மோகன் கலந்துகொண்டு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால், மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜா, குமரவேல், திருமால், தாமரைச்செல்வன், தேன்மொழி, அண்ணாமலை, கோவிந்தசாமி, அன்சாரி, குசேலன், ராஜப்பா, இளம்பரிதி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story