அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், சிதம்பரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்:
மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக வாபஸ் வாங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, முனுசாமி, வேல்முருகன், ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் அருளழகன், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், முன்னாள் அரசு வக்கீல்கள் விஜயகுமார், இளையராஜா, நகர அவைத் தலைவர் தங்கராசு, நகர துணை செயலாளர் மணிவண்ணன், நகர பொருளாளர் முத்தார் அலி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பு பிள்ளை, கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சந்திரகுமார் நன்றி கூறினார்.
விருத்தாசலம், சிதம்பரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளர் முருகுமாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராசாங்கம், அசோகன், ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுதேவன், சிதம்பரம் நகர துணை செயலாளர் ஹரி சக்தி, நிர்வாகி முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.