மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story