காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை


விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் காய்கறிகளை மாலையாக அணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, பூராசாமி, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

காய்கறிகளை மாலையாக அணிவித்து...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெண்டைக்காய், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை மாலையாக அணிவித்துக்கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஜனார்த்தனம், இளங்கோவன், மகேந்திரவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்தி நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story