விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கம்மாபுரத்தில் விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
கம்மாபுரம்,
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலமற்ற ஏழைகளுக்கு கணக்கெடுப்பு அடிப்படையில் புதிய வீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும். ஏழைகள், தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தெய்வ சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜசங்கர், ஒன்றிய தலைவர் தெய்வநாயகம், மாவட்ட குழு புகழேந்தி, குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் கிளைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story