அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம்.ராமசாமி, ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சொந்த வீடு இல்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு பணிகள் மற்றும் கட்டிட பணிகளுக்கு மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.