அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், வனத்துறை தொகுப்பு ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி மோகன், வட்ட நிர்வாகி பாலகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் மோகன்குமார் பேசினார். இதில் ஓய்வுபெற்ற அரசுத்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story