அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சுகுமாரன், மாவட்ட செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும்.

ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாகவும்...

மத்திய அரசு வழங்கும் அதேநாளில் அகவிலைப்படி உயர்வினை அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். நிலுவை தொகை பிடித்தமின்றி வழங்கிட வேண்டும். 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிட வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதமாகவும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story