பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொறுப்பாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பையா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். இதில் செயல் தலைவர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் சிவா, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.அனைத்து அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவி உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இறப்பு இயற்கை மரண உதவி வழங்க வேண்டும். ஓட்டுனர்கள் பணி நேர விபத்து மரண உதவித்தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ. மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.