பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாபுலால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கட்ராகவன் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் திருமலைச்சாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து, தேசிய தொழிலாளர்கள் நல கொள்கை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய முறையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 மணிநேர வேலை சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஆட்டோ யூனியன் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story