பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியில் தி.மு.க.வும், தமிழக அரசும் ஈடுபடுவதாக கூறி மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்று பேசினார். இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ்குமார், எஸ்.டி.அணி மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொது செயலாளர் சத்தியபானு, சேதுராமன், நகரத் தலைவர் சரவணன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்கள். அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், தி.மு.க.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது தமிழ் மொழியை பாதுகாப்பதை விடுத்து, அழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடுவதாக பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர். அதேபோல் இதுவரை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழ் மொழியை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. குறித்து பொய் பிரச்சாரங்கள் செய்வதை தவிர்த்துவிட்டு, தமிழ் மொழியை பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், பொதுச் செயலாளர் நாகராஜன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.