பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.க. மாநில பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பட்டியல் அணியின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன், பட்டியல் அணி மாநிலச் செயலாளர் பிச்சைமுத்து ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் சிவா.இளங்கோவன், மாநில துணைத் தலைவர் கலைச்செல்வன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.