ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் ஊராட்சியில் சுகாதாரமற்ற முறையில் கிடக்கும் அரசு மருத்துவமனையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெலக்கல்நத்தம் பா.ம.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட தலைவர் கந்தன், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவமனைக்கு காய்ச்சல், இருமல், விபத்து அவரச சிகிச்சை, குழந்தை, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் நிறைந்து, சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசி வருவதால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து தரவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.