சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

கரூர் - கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும் சி.ஐ.டி.யு. சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மின்ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், மின்ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் தனபால், டி.என்.எஸ்.டி.சி. (சி.ஐ.டி.யு.) பாலசுப்பிரமணியன், டாஸ்மாக் (சி.ஐ.டி.யு.) கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி அரசு மேற்கொண்ட போனஸ் குறைப்பை கைவிட வேண்டும், தொழிற்சங்கங்களை அழைத்துப்பேசி போனஸ் அறிவிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


Next Story