சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டிவனத்தில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சாதாரண பயண கட்டண பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல் படியை இரு மடங்காக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவிப்பது, ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மணி, காளிதாஸ், முன்னாள் மண்டல தலைவர் ராமதாஸ், தேவராஜ், ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பணிமனை நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பஸ்கள் பணிமனையின் உள்ளே வந்து செல்ல முடியாததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story