காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி நிர்வாகிகள், தொண்டர்களை தாக்கியதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

1 More update

Next Story