காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் போலீசார் புகுந்து தலைவர்கள், எம்.பி.க்களை தாக்கியதை கண்டித்தும் புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் நிர்வாகிகள் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story