காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

ஆனைமலை,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்தும், டெல்லியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார் போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் ஆனைமலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முக்கோணம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் ஜவஹர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் தேசிங்கு ராஜன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று சுல்தான்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சுல்தான்பேட்டை வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story