இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதி குழு அம்மாக்குளம் கிளை செயலாளர் தவ்பீக் மீது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் உள்ளிட்ட 15 பேர் ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அவர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story