தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியும், விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் அணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இதேபோன்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story