கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் துரை.சிவா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொருளாளர் வேணுராம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கிட வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலங்களை அழிக்க கூடாது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story