மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
பா.ஜனதா ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் பழங்குடியின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம், ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு நடைபெற்றது. இதற்கு மாநில திமுக மகளிர் அணி இணை செயலாளரும், மாநில மகளிர் ஆணைய தலைவருமான குமரி ஜெயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மணிப்பூர் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது, உலக அரங்கில் நமது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனது மணிப்பூர் கலவரத்தை உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.