மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திருச்சி செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை தலைவர் இனியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில செயலாளர் செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் முரளி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். 8 மணிநேர வேலை அரசாணையை அமல்படுத்த வேண்டும். பணி நியமன ஆணையை முறையாக வழங்க வேண்டும். போனஸ், பி.எப்., இ.எஸ்.ஐ., பே சிலிப் முறையாக வழங்க வேண்டும். பெண் மருத்துவ பிரதிநிதிகளுக்கு பேறுகால விடுப்பு 6 மாதமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story